திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, புதிய தலைவர் மற்றும் பொருளாள தேர்ந்தெடுப்பதற்காக வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது. ஆனால் கருணாநிதி மறைந்த மூன்றாம் நாளே அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள், எனது ஆதங்கத்தை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளேன் என திரியை கொளுத்திப் போட்டார்.

அப்போது முதலே ஸ்டாலின்-அழகிரி மோதல் முற்றத் தொடங்கியது. தனக்குப் பின்னால் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்பதைக் காட்ட வரும் செப்ட்ம்பர் 5 ஆம் தேதி கருணாநிதி இறந்த 30 ஆவது நாள் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்றை அழகிரி நடத்த உள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாகவே திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தலைவராகிவிட வேண்டும் என காய் நகர்ந்தத தொடங்கி விட்டார் ஸ்டாலின்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுக பொதுக்குழு கூடுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கருணாநிதியின் நினைவிடத்தில் தனது ஆதங்கத்தை கூறிவிட்டேன், வருட் செட்ம்பர் 5 ஆம் தேதி பேரணி நடத்தி எனது தொண்டர்கள் பலத்தை நிருபிப்பேன் என்றும் அழகிரி தெரிவித்தார்.

என்னிடம் கருணாநிதி கடைசியாக தெரிவித்த வார்த்தைகள் . நெஞ்சில் பசுமையாக பதிந்துள்ளன என்றும்  அது என்ன என்பதை, வெளியில் தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்த அழகிரி,  அவர் நினைத்த காரியத்தை, நான் செய்து முடிப்பேன் என உறுதிபடத் தெரிவித்தார்.

தற்போது கருணாநிதி என்ன சொன்னார் ? அதை அழகிரி எப்படி செய்து முடிக்கப் போகிறார் ? அவர் சொல்வது நிஜமா ? அல்லது ரீல் விடுகிறாரா ? என திமுகவின் குழம்பிப் போயிருக்கிறார்கள்.