சாதி வரம்புகளைத் தாண்டி தன்மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள். காதல்வெல்லும்..! என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சாதிப்பித்தர்களின் கூட்டுச்சதிக்கு இளவரசன் பலியான நாள். நாடக அரசியலுக்காக இளவரசனை நரபலி கொடுத்து திவ்யாவை நடுத்தெருவில் விட்ட சனாதனிகளை அச்சுறுத்தும் நாள். சாதி வரம்புகளைத் தாண்டி தன்மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள். காதல்வெல்லும்..!’

ஊடகவியலாளர்களைக் குறிவைக்கும் சனாதனிகள். தமிழகத்தில் பரவும் சனாதனப் பயங்கரவாதம். சாத்தான்குளம் காவல்வதை படுகொலைக்கு  கிறித்தவவெறுப்பைக் கக்கிய சனாதனிகளின் ஊடுருவல் காரணமென சொல்லப்படுகிறது. எனவே, அரசு இப்போக்கை அலட்சியப் படுத்திவிடக் கூடாது.  சனாதனம் எச்சரிக்கை!?! எனத் தெரிவித்துள்ளார். 

திருமாவளவனின் இந்தப்பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஒருவர், இந்த நாளில் கடந்த 04-07-2014 ந் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டேன். நான் பறையர்-என் மனைவி வன்னியர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்து தங்களது புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.