எகிப்தில் மருத்துவராக பணியாற்றி வந்த ஆயிசா மொசாபாவுக்கும், அங்கு கொரோனா நோயாளியாக அட்மிட் ஆன முகமது பாமிக்கும் காதல் மலர, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் முன் ஆயிசாவுக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்த  டாக்டரும் ஒப்புக் கொள்ள அந்த போட்டோ வைரலானது. ஆனால் அந்த போட்டோவுக்கும் இந்தக் காதலுக்கும் சம்பந்தமில்லை. ஆயிஷாவும், முகமுவும் ஏற்கெனவே கமிட் ஆனவர்கள். கொரோனா விழிப்புணர்வுக்காக அந்த போட்டோவை வெளியிட்டதாக கூறினர். 

ஆனால், அதனையும் மிஞ்சிய ஒரு காதல் கதை சென்னை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும்  ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ளனர். 

அடுத்து நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது அருகருகில் அமர்ந்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திடீரென இருவரும் மாயமாகி உள்ளனர். பின்னர் இருவரும் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாக்டர்களிடம் நர்ஸ்கள் புகார் அளிக்க, டாக்டர் அதிரடியாக அந்த இளம்பெண்ணை வேறு வார்டுக்கு மாற்றிவிட்டதாக தெரிகிறது. 

இளம்பெண்ணை வேறு வார்டுக்கு மாற்றிய மருத்துவருக்கு ஒருமுக்கிய பிரமுகரிடம் இருந்து ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் பெண் தனக்கு வேண்டியவர் என்றும், அவர் விரும்பும் வார்டுக்கு உடனே மாற்றவும் என்றும் அன்புக்கட்டளை வந்துள்ளது. இதனையடுத்து வேறு வழியில்லாமல், அந்த இளம்பெண் தற்போது மீண்டும் இளைஞர் இருக்கும் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது இருவரும் மீண்டும் தங்கள் காதலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது. 

கொரோனாவிலும் குளிர்விடும் இந்த காதலை என்னவென்று சொல்வது..?