திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி நகரிலுள்ள தனது  வீட்டில் இன்று காலை குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். 

கோபாலபுரம் வீட்டில் கோலம்...

இந்நிலையில் அவர் வரைந்த கோலத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து இருந்தன. இந்தக் கோலத்தை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றன. இதனையறிந்த கனிமொழி, மீண்டும் வேறொரு கோலத்தை வரைந்து அதனை தனது சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது வீட்டில் வரையப்பட்டதாக ஒரு கோலத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கோலமும் தாமரை வடிவில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மு.க.ஸ்டாலின் வீட்டில் கோலம்... 

<

/p>

பாஜக ஆதரவாளர்கள் சிலர், கோலம் போடுவது இந்துக்களின் வழக்கம். அவர்கள் மஹாலட்சுமியை வரவேற்று கோலம் போடுவார்கள். ஆனால் இந்து மத வெறுப்பாளர்களையும் அவர்களது வீட்டில் கோலம்போட வைத்ததே தங்களுக்கு கிடைத்த வெற்றி என கூறி வருகின்றனர்.