உள்ளாட்சி மறைமுக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றக்கிளை பதிவாளர் விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை ஊரக உள்ளாட்சி மறைமுக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.