Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தல்.. மேலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Local body elections... Petition for the 3rd time election commission
Author
Tamil Nadu, First Published Sep 4, 2021, 12:10 PM IST

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Local body elections... Petition for the 3rd time election commission

இந்நிலையில், விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ?டுபட்டு வருகிறது.  9 மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

Local body elections... Petition for the 3rd time election commission

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது 3வது முறையாக அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios