Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சித் தேர்தல்.. இந்த மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை..!

தமிழகத்தில் விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது விற்பனை செய்ய தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Local Body Election...Prohibition of liquor sale in 9 districts
Author
Tamil Nadu, First Published Sep 30, 2021, 1:59 PM IST

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையன்று மது விற்க மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது விற்பனை செய்ய தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Local Body Election...Prohibition of liquor sale in 9 districts

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மது பாட்டில்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Local Body Election...Prohibition of liquor sale in 9 districts

அதனை தொடர்ந்து 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios