தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளோம் என்று அதிமுக பொய் பிரசாரம் செய்துகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் தனது தொகுதி பெண்களுக்கு இலவசமாக கலைஞர் கணினி தொழில் பயிற்சிகள் அளிக்கும் மையம் திறப்பு விழா பெற்றது. பின்னர், சைதாப்பேட்டை திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்:- ஆளும்கட்சி அமைச்சர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக சரிசமமாக வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். தேர்தலில் ஆளும்கட்சியினர் தோற்றவர்களை ஜெயித்தவர்களாக அறிவித்தனர். இவ்வளவு அக்கிரமமும் நடந்த பிறகும், ஒன்றிய கவுன்சிலர் பதவியில், அதிமுக.,வை விட 319 இடங்களும், மாவட்ட கவுன்சிலர் பதவியில் 29 இடங்களும் கூடுதலாக வென்றுள்ளோம் என்றார். 

அதிமுக அமைச்சர் ஒருவர் திமுக தேய்பிறை என்றும் அதிமுகவை வளர்பிறை என்றும் சொல்கிறார். ஒன்றிய கவுன்சிலர்கள் 2100 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுகவில் 1781 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இது சரிசமமா? மேலும், முந்திரிக்கொட்டை அமைச்சர் அரசியலுக்காக வேண்டுமானால் அப்படி பேசலாம். ஊடகங்கள் தவறாக எழுதலாமா? 2020 வரும் காலத்தில் திமுக இதைவிட மகத்தான வெற்றி பெறும். தொடர்ந்து கலைஞர் வழியில் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.