Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

Light rain in southern districts in next 24 hours. Early morning fog warning in Chennai.
Author
Chennai, First Published Jan 23, 2021, 1:04 PM IST

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Light rain in southern districts in next 24 hours. Early morning fog warning in Chennai.

24-1- 2021 முதல் 27-1-2021 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Light rain in southern districts in next 24 hours. Early morning fog warning in Chennai.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் விமான நிலையம் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios