உதயநிதி ட்விட்டுகளை பார்க்கும்போது முரசொலி கடிதங்கள் நினைவுக்கு வருகின்றன என பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் பாராட்டி புகழ்ந்துள்ளார். 

திமுக இளைஞரணி பொதுச்செயலாளர் உதயநிதி கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் ஆவேசமாகவும், அர்த்தமுள்ளதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி இதுகுறித்து கூறியபோது, ‘சர்வக்கட்சி சகல பத்திரிக்கைகள், தீக்கதிர், தினமணி, தந்தி, துக்ளக், உண்மை மக்கள் குரல் உலவிய எங்கள் தாத்தா வீட்டில் அன்று படித்த முரசொலி கடிதங்கள் நினைவிற்கு நீந்தி வருகிறது உதயநிதி அவர்களின் டுவிட்டர் எழத்துக்களை காணும் பொழுது...’’என்று அவர் தெரிவித்துள்ளார். சீனுராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் உதயநிதி நடித்துள்ளார்.