மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்த பிறகு எங்களுடைய அடுத்த குறி, மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொல்கத்தாவில் நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பேசுகையில், “மேற்கு வங்கத்தை அம்பான் புயல் தாக்கிய பிறகு நிவாரணப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் எனது அரசு செலவிட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் மக்களுடனேயே இருந்தோம்.
அவர்களுக்காகப் பணியாற்றினோம். அப்போது பாஜக தலைவர்கள் எங்கே சென்றார்கள்? மக்கள் பிரச்னைக்காக அவர்கள் எப்போதும் முன் நின்றதேயில்லை.

