Asianet News TamilAsianet News Tamil

தைலாபுரத்தில் ஜெய் பீம் படத்தை ஓட்டி காட்டுவோம்.. முடிந்தால் தடுத்து பார்.? பற்றி எரியும் பசும்பொன் பாண்டியன்.

துணிவிருந்தால் திரையரங்கு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்து பாருங்கள், தென் மாவட்டத்திற்கு வந்து விட்டு நீங்கள் திரும்புங்கள் பார்க்கலாம், நீங்கள் உள்ள வடமாவட்டத்திற்கே வந்த படத்தை ஒட்டுகிறோம், திண்டிவனத்தில் ஒட்டி காட்டவா, விழுப்புரத்தில் ஓட்டி காட்டவா, தைலாபுரம் தோட்டத்திற்கே வந்து திரைப்படத்தை ஓட்டி காட்டுவோம் 

Let s screaning the Jai Bhim movie in Thilapuram .. Stop it if possible.? Pasumpoon  Pandian Challanged.
Author
Chennai, First Published Nov 18, 2021, 1:16 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நீங்கள் எத்தனை திட்டம் போட்டாலும் நடிகர் சூர்யாவை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ஜெய் பீம் திரைப்படத்தை ஓட்டி காட்டுவோம் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை எச்சரித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Let s screaning the Jai Bhim movie in Thilapuram .. Stop it if possible.? Pasumpoon  Pandian Challanged.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. ஆனால் சூர்யா அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறதார். இந்நிலையில் பாமகவினர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்றும், அவர் வெளியில் நடமாட முடியாது என்றும் அச்சுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியில் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இந்த வரிசையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை எச்சரிக்கும் வகையில் காட்டமாக பேட்டி கொடுத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கி பேட்டி கொடுத்துள்ள அவர், 

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எடுத்த தவறான முடிவின் காரணமாக பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. அவரைப்போலவே அவரது மகன் அன்புமணியும் இருக்கிறார். வன்னிய மக்கள் வலுவாக உள்ள ஐந்து மாவட்டங்களில் கூட பாமக எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர்கள் பேசியது ஒன்று செயல்பட்டது ஒன்று, வன்னிய மக்கள் ராமதாசுக்கு ஆதரவாக இல்லை, ஆனால் ஒரு ரவுடி கும்பலை வைத்துக்கொண்டு  தமிழ்நாட்டில் ரவுடித்தனம் செய்யலாம், மிரட்டி பார்க்கலாம் என முயற்சி செய்கிறார். நடப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அல்ல, ராமதாஸ் எடுத்த எந்த வியூகங்களும் எடுபடவில்லை என்பதனால், இப்போது சூர்யாவிடம் வந்திருக்கிறார்கள், மனதை புண்படுத்துவதாக கூறியதால் அந்த காலண்டரில் உள்ள காட்சிகளை எடுத்து விட்டார். அதன்பிறகும் ஏன் 5 கோடி கேட்கிறீர்கள். அது என்ன  மாமூலா, கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்களா.? மிரட்டி பார்க்கிறீர்களா.? சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என்கிறீர்கள், ஏன் உங்களை உதைத்தால் இரண்டு லட்சம் என்று சொல்ல ஆள் இல்லை என்று நினைக்கிறீர்களா. நீ காசு கொடுத்தால்தான் சூர்யாவை உதைப்பான் ஆனால் இன்று சூர்யா விதித்துள்ள விதை ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக உள்ளது. 

Let s screaning the Jai Bhim movie in Thilapuram .. Stop it if possible.? Pasumpoon  Pandian Challanged.

சூர்யாவை நீங்கள் நெருங்க கூட முடியாது, ராமதாசுக்கு செல்வாக்கு சுருக்கி விட்டது எனக் கூறியுள்ளார். இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் படம் ஓடியிருக்காது என்றும், வன்னியர்கள் தியேட்டர்களை கொளுத்தியிருப்பார்கள் என்றும் பாமக கூறுகிறதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர்,  அவர்கள் சொல்வதைப் போலவே நாங்கள் திரையரங்கில் படத்தை வெளியிடுகிறோம், துணிவிருந்தால் திரையரங்கு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்து பாருங்கள், தென் மாவட்டத்திற்கு வந்து விட்டு நீங்கள் திரும்புங்கள் பார்க்கலாம், நீங்கள் உள்ள வடமாவட்டத்திற்கே வந்த படத்தை ஒட்டுகிறோம், திண்டிவனத்தில் ஒட்டி காட்டவா, விழுப்புரத்தில் ஓட்டி காட்டவா, தைலாபுரம் தோட்டத்திற்கே வந்து திரைப்படத்தை ஓட்டி காட்டுவோம் உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது. ஏனென்றால் வன்னிய மக்கள் உங்கள் பின்னால் இல்லை, தயவு செய்து வன்னிய மக்களை ஏமாற்றும் அரசியலை கைவிடுங்கள் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios