ஆளை விடுங்க சாமி... எடப்பாடி -ஓ.பி.எஸ் மோதலால் தெறிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..!
எங்களை செலவு செய்யச் சொன்னால் எப்படி என்று மாவட்ட செயலாளர்களிடம் கேட்டு வருகிறார்களாம். ஆனால் வலுவான துறைகளை எல்லாம் எல்லாம் கொங்கு மண்டலத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தார்கள்.
அதிமுகவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. ஓபிஎஸ் - இபிஎஸ் நிர்வாகிகள் இடையிலான மோதல் ஒரு பக்கம். அன்வர் ராஜா உள்ளிட்ட பல நிர்வாகிகளை வரிசையாக நீங்கியதால் ஏற்பட்ட குழப்பம் ஒரு பக்கம். அதிமுகவில் சத்தமின்றி சசிகலா கேம்ப் பார்க்கும் உள்ளடி வேலைகள் இன்னொரு பக்கம் என்று பல பக்கங்களில் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நிலவுகிறது. நிர்வாகிகள் இடையே அவ்வளவு ஒற்றுமை இல்லை. இதெல்லாம் சேர்ந்து கண்டிப்பாக தேர்தல் பணிகளை பாதிக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கு பெரிதாக தயாராகவில்லை. கடந்த டிசம்பரில்தான் இதற்கான விருப்ப மனுக்களை வாங்கியது. ஆனால் அதையும் கூட அதிமுக தலைமை பெரிதாக இதுவரை சோதனை செய்யவில்லை. விரும்ப மனு கொடுத்தவர்களில் பிரபலம் ஆனவர்களையும், மாவட்ட செயலாளர்களுக்கு நெருக்கம் ஆனவர்களையும் அதிமுக கண்ணை மூடிக்கொண்டு டிக் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுக சிக்கலில் உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தேர்ததல் செலவுகளை பாதியளவு பார்த்துக் கொண்டனர். தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்த 5 அமைச்சர்கள் விட்டமின்களை இறக்கினார்கள். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருந்தது. தற்போது அதிமுகவில் அதிகாரங்களை ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் சமமாக பிரித்துக் கொண்டுள்ளனர். அதனால் வரும் நகர்ப்புற தேர்தலில் பாதி செலவை ஓபிஎஸ் தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எடப்படி தரப்பினர் வலியுறுத்துகிறார்கள்.
ஆம் அதிகாரத்தில் மட்டும் சரி சமமாக பங்கு வேண்டும்? செலவு என்றால் மட்டும் ஓ.பி.எஸ் விலகுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உள்ளம் குமுறுகின்றனர். இப்படி இரு தலைவர்களால் வெளியே உள்ள மோதலால் அதிமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் கட்சி நிர்வாகிகளை அமைச்சர்கள் 10 பைசா கூட சம்பாதிக்க விடவில்லை. ’நல்லது. கெட்டது’ செய்து கொடுக்கவில்லை. எல்லாம் வாங்கிக் கொடுத்தால் செய்தவர்கள். இப்போது நாங்கள் களத்தில் இருப்பதே பெரிய விஷயம். எங்களை செலவு செய்யச் சொன்னால் எப்படி என்று மாவட்ட செயலாளர்களிடம் கேட்டு வருகிறார்களாம். ஆனால் வலுவான துறைகளை எல்லாம் எல்லாம் கொங்கு மண்டலத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு எப்படி எங்களால் செலவு செய்ய முடியும் என்கிறார்கள் ஓ.பி.எஸ் தரப்பினர். இப்படி அதிமுகவில் பரிதாப நிலைதான் இருக்கிறது என்கிறார்கள்.