Asianet News TamilAsianet News Tamil

திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும்... திமுகவை விளாசும் நாராயணன் திருப்பதி!!

திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சாடியுள்ளார். 

let dmk contest the 2024 election alone if it dare says narayanan tirupathi
Author
First Published Dec 31, 2022, 11:22 PM IST

திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சாடியுள்ளார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பாஜக நினைக்கிறது. மற்றபடி, தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள்.

இதையும் படிங்க: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 தருவது எப்போது? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர,தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  திமுக ஆட்சி அமைந்து 18 மாசம் ஆச்சு.. எந்த திட்டமும் மக்களுக்கு செல்லவில்லை - ஆர்.பி உதயகுமார் பேச்சு

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின், 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத, தெம்பில்லாத ஒரு கட்சி திமுக. 2014ல் கூட்டணி வைத்து போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத கட்சி திமுக. சவால் விடுகிறோம். திமுவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios