ADMK : எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். தேனி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த கோஷத்தை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். தேனி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னையில் எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?
நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனையில் தம்பிதுரை, வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக தலைமை பதவியை பிடிக்க இரு தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவை வீழ்த்திவிட்வோம் என மனப்பால் குடிக்காதீர்கள். மீண்டு எழுந்து பீனிக்ஸ் பறவையா வருவோம். வரக்கூடிய அதிமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் எம்ஜிஆருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இருக்கும்’ என்று அதிமுக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !
