ஸ்ரீரங்கம் கோவில் உள்ளேயே தாக்குதல் நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஓபிஎஸ்
கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது" என்று வசனம் எழுதியவரின் வழியில் நடக்கும் ஆட்சியில் கோயில் அல்ல, தமிழ்நாடே கொடியவர்களின் கூடாரமாகி விடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்குள்ளேயே அய்யப்ப பக்தர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், அரசு ஊழியர்களை மிரட்டுதல், தொழிலதிபர்களை மிரட்டுதல், ஆணவக் கொலை போன்றவை கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்ற நிலையில், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்குள்ளேயே அய்யப்ப பக்தர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்குள் இதுபோன்றதொரு தாக்குதல் அய்யப்ப பக்தர்கள் மீது நடைபெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க;- இந்துக்களை பிடிக்காத திமுக அரசு.! பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை.. எல்.முருகன் ஆவேசம்!
அறம் வளர்த்த பண்பாட்டு நினைவுச் சின்னங்களாகவும்; இயல், இசை, நாடகக் கலைகளை வளர்த்த மையங்களாகவும்; ஓவிய, சிற்பக் கூடங்களாகவும்; வரலாற்றுச் சின்னங்களாகவும், அமைதியின் பிறப்பிடமாகவும், பொதுமக்களின் துன்பங்களை, துயரங்களை போக்குமிடமாகவும் விளங்குபவை திருக்கோவில்கள். இப்படிப்பட்ட திருக்கோவில்களிலேயே கொடூரத் தாக்குதல், அடிதடி என்றால், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது" என்று வசனம் எழுதியவரின் வழியில் நடக்கும் ஆட்சியில் கோயில் அல்ல, தமிழ்நாடே கொடியவர்களின் கூடாரமாகி விடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குவது சட்டம் ஒழுங்குதான் என்பதைக் கருத்தில் கொண்டு, திருக்கோயில்களில் இதுபோன்ற தாக்குதல் இனி வருங்காலங்களில் வராமல் பார்த்துக் கொள்ளவும், சட்டம்-ஒழுங்கை சீராக்குவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.