Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும்… எஸ்.பி.வேலுமணி தகவல்!!

பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

largest alliance will be formed under the leadership of edapadi palanisamy says sp velumani
Author
First Published Nov 8, 2022, 8:57 PM IST

பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா அவுலிநா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மீண்டும் அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற  உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கேர்.ஆர் ஜெயராம் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும், சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா.? திமுகவை பொளந்து கட்டிய பாஜக !

largest alliance will be formed under the leadership of edapadi palanisamy says sp velumani

அவரை தொடர்ந்து பேசிய தமிழ் மகன் உசேன், எடப்பாடியார் அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளராக வேண்டியும், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காகளில் ஆனமீக பயணம் மேற்கொண்டுள்ளேன். 39 வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளேன். மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிராத்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும். தமிழகத்தின் அதிமுகவின் முதல் மாவட்ட அமைப்பாளர் நான்தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுக.

இதையும் படிங்க: 60-க்கும் அதிகமான சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு..! அரசியல் ஆதாயத்திற்காக பலி கொடுக்க தயாராகும் திமுக- வானதி

largest alliance will be formed under the leadership of edapadi palanisamy says sp velumani

உலமாக்களுக்கு  ஒய்வூதியம் வழங்கிய கட்சி அதிமுக. ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும் மெக்கா மதினா செல்லவும், இஸ்லாமியர் வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்து இருக்கின்றது. கோவைக்கு திமுக ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது. கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது. அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். 21 ஆண்டுகள் இப்தார் நோம்பை நடத்தியவர் ஜெயலலிதா. இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது. பாபுஜி சாமிகள் நமக்கு சித்தப்பாதான். துவா நிகழ்வில் பாபுஜி சாமிகள் கலந்து இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios