Asianet News TamilAsianet News Tamil

மதுரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் நுழைய இது தான் காரணமாம் !!

தேர்தல் அதிகாரிகள் தங்களுக்குரிய 17C பார்ம் ஐ சமர்பிக்க வேண்டும் விதி உள்ள நிலையில்  அதை ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில்  வைத்துவிட்டு வந்துவிட்டதால் அதை எடுப்பதற்காகத்தான் பெண் தாசில்தார் உள்ளே சென்றதாகவும், மற்றபடி அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

lady tashildar sampooranam in Madurai
Author
Madurai, First Published Apr 22, 2019, 9:10 AM IST

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள 6 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை கலால் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர்,  நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் மதுரை மருத்துவக் கல்லூரியில் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். 

lady tashildar sampooranam in Madurai

அப்போது சில ஆவணங்களை சம்பூரணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, தனியார் ஜெராக்ஸ் கடையில்  நகல் எடுத்துள்ளார். தகவல் அறிந்து திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து வந்தனர்.
இது தொடர்பாக எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கையை அடுத்து பெண் அதிகாரி சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் சம்பூரணத்தை மாவட்ட ஆட்சியர் தறகாலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

lady tashildar sampooranam in Madurai

இதனிடையே தாசில்தார் சம்பூரணம் எதற்காக ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்றார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பூரணம்  தேர்தல் நாள் அன்று தேர்தலை முடித்த கையுடன் 17C பார்ம் ஐ சமர்பிக்க வேண்டும்.

lady tashildar sampooranam in Madurai

ஆனால் சம்பூரணம் அதனை மறந்துவிட்டு வந்து விட்டார் அனைத்து ரிக்கார்டுகளை சரிபார்த்த ஆட்சியர் சம்பூரணம் மட்டும் 17C பாரம் சமர்பிக்கப்வில்லை என்று கவனித்து அவரை கூப்பிட்டு "17C பாரம் எங்கே உடனே கொண்டு வாருங்கள்" என்று கூறவே அவசர அவசரமாக மையத்தில் நுழைந்தவர் தேடி கண்டு பிடித்து எடுத்து ஜெராக்ஸ்  எடுத்து வரும் போது இவர் பதற்றமாக வருவதை கவனித்த காவலர் விசாரித்த போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது
 
துணை ஆட்சியர் ஆகும் நிலையில் இருந்த சம்பூரணம் மிகவும் நேர்மையானவர் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து விசாரணை நடத்தி வரும் தேர்தல் ஆணைய அதிகாரி இன்று தனது அறிக்கையை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கலால் வரி ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகியோர் இப்பிரச்சனை தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

Follow Us:
Download App:
  • android
  • ios