அரசியலில் இறங்கி அடிப்பது எனும் முடிவிலிருக்கும் தினகரன், தமிழகத்தை பரபரப்பாக்கும் எந்த அரசியல் நிகழ்வுகளையும் விட்டுவைப்பதில்லை. எல்லாவற்றிலும் ‘உள்ளேன் அய்யா’ என்று ஆஜராகி அறிக்கைவிட்டு அட்ராசிட்டி செய்கிறார். அந்த வகையில் அரசியல் தாண்டி, சினிமா நடிகையின் இழப்புக்கு கூட வருத்த கருத்து தெரிவித்து தனது இருப்பை எல்லா ஆங்கிளிலும் தக்க வைக்க முயற்சிக்கிறார் தினகரன். 

இந்த நிலையில், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, தமிழ் சினிமா உலகை மட்டுமல்லாது இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஸ்ரீதேவி நேற்று நள்ளிரவில் துபாயில் மாரடைப்பால் காலமானார். இந்திய திரையுலகினர், அவரது மறைவுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், தினாவும் ஒரு Sad emoji யை தட்டி விட்டிருப்பதுதான் ஹைலைட்

’இந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் ஸ்ரீதேவி. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.’ என்று வருந்தியிருக்கிறார். 

இதை  தேற்றுவதற்கு வழியில்லாத ரசிகர் ஒருவரைப் போல் திணறிப்போய் ஃபீல் செய்திருக்கிறார் தினகரன் ன்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.