Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் மக்களை ஏமாற்றி விட்டார் மோடி... கட்சியை விட்டு விலகிய பா.ஜ.க தலைவர்..!

ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி லடாக் பாஜக தலைவர் கட்சியை விட்டு விலகியுள்ளார். 
 

ladakh unit president chering dorjay quit the bjp party
Author
Ladakh, First Published May 4, 2020, 5:52 PM IST

ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி லடாக் பாஜக தலைவர் கட்சியை விட்டு விலகியுள்ளார். 

நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் அதன் லடாக் மக்களை அழைத்து வர யூனியன் பிரதேச நிர்வாகம் தவறிவிட்டதாக கூறி லடாக் பா.ஜ.க தலைவர் செரிங் டோர்ஜய் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர், ‘’இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் நோயாளிகள், யாத்ரீகர்கள் மற்றும் யு.டி.யைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட சுமார் 20,000 பேர் உள்ளனர். அவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  இந்த அரசாங்கம். அந்தக் கட்சியில் இருப்பது தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார். 

ladakh unit president chering dorjay quit the bjp party

இதுதொடர்பாக அவர் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நாடாவுக்கு எழுதிய கடிதத்தில்,  வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்காமல் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது லடாக் நிர்வாகம். இந்த விவகாரம் தொடர்பாக லடாக் ஆளுநர், பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் மற்றும் லடாக் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியும் எந்த பலனும் இல்லை. ladakh unit president chering dorjay quit the bjp party

அவர்கள் முழு முயற்சியுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகம் எந்த நம்பிக்கையும் எங்கள் பகுதிமக்களுக்கு அளிக்கவில்லை. இந்த நிர்வாகத்தை நம்பி பயனில்லை எனக் குறிப்பிட்டு அதனால் பாஜக கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios