யாரெல்லாம் வேல் யாத்திரையை விமர்சித்தார்களோ, அவர்களே கையில் வேலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட‌ பாஜக அணி பிரிவு மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய எல்.முருகன்;- சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்புள்ளது. ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதால் தமிழகத்தில் எந்த தாக்கமும் இருக்காது. ஓட்டுக்காக இரட்டை நிலைப்பாடு எடுப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும்.

ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜக நடத்திய வேல் யாத்திரையின் வெற்றி. முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியுள்ளார். மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினர் அதிகப்படியானோர் சட்டமன்றம் செல்வார்கள் என எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.