எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் போது சென்னையில் ரவுடிகளை கட்சியில் இணைந்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் போது சென்னையில் ரவுடிகளை கட்சியில் இணைந்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் மக்கள் தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் வசீகரன் கூறினார். சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெட்ரோல் டீசல் உயர்திய மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் மாநில தலைவர் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலையில் விறகுகள் மற்றும் காலியான சிலிண்டர்களை வைத்து மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அதற்கு போக்குவரத்து நன்றாக இருக்க வேண்டும் எனவும், தமிழிசை சவுந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள் என்றும், மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு அகல பாதாளத்தில் கொண்டு தள்ளி விட்டார்கள் எனவும் குற்றம் சாட்டினர். மேலும் பேசிய அவர் இதற்கு எல்லாம் வரும் 2024 தேர்தலில் மக்கள் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழக அரசுக்கு மிகப்பெரிய வேண்டுகோள் வைக்கிறோம், டீசல் பெட்ரோல் போட்டு வாகனங்களை ஓட்டுவது மிக சிரமமாக உள்ளது எனவே சைக்கிளுக்கு போடும் வரியை தமிழ்நாடு அரசை குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.

தொடந்து பேசிய அவர் அண்ணாமலை ஆட்டுக்குட்டி என்கின்றனர். அவர் மிகப் பெரிய பிராடு தானம் செய்து வருகிறார், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எனக்கு 75 ஏக்கர் நிலம் உள்ளது என்று பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் கலவரத்தை தூண்டி கட்சியை வளர்க்கிறார் அண்ணாமலை என்றும், அதற்கு உதாரணமாக இரண்டு நாட்கள் முன்பு அம்பேத்கரின் பிறந்த நாளன்று கலவரத்தை பார்த்தோம் என்று கூறினார். எல்.முருகன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் போது சென்னையில் ரவுடிகளை கட்சியில் இணைந்துள்ளார் எனவும் அவர் மேற்கோள் காட்டினார்.