kushpoo said ambethkar death anversary controversy
டாக்டர் அம்பேத்கரின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், "அம்பேத்கரின் நினைவு நாளுக்காக அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம் என கூறினார். பின் அவருடன் இருந்தவர்கள் நினைவு நாள் இல்லை... பிறந்த நாள் என கூறியதும் சுதாரித்துக்கொண்டு அவருடைய பிறந்த நாள் என திருத்திக்கொண்டார்.
மேலும் இது போன்ற தலைவர்கள் இப்போது இல்லை என வருத்தமாக இருக்கிறது என்றும் தமிழகத்தின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்றால், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தான் வேண்டும் என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருந்துக்கொண்டு... தமிழர்கள் போற்றும் தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் பிறந்த நாளுக்கும், நினைவு நாளுக்கும் வித்தியாசம் தெரியாமல் குஷ்பு உளறி உள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
