கடந்த  27 மற்றும் 28ம் தேதிகளில் திமுக தலைவர், கருணாநிதியின் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்ட போது, அவசர அவசரமாக வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் நடிகை குஷ்பு.

இவர் திமுக கட்சியில் இருந்து விலகி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டாலும், தற்போது வரி திமுக கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நல்ல உறவு பாராட்டி வருவதாக தெரிவித்தார்.

எப்போதும், கருணாநிதியை அப்பா என்று கூறும் குஷ்பு,  சில தினங்களுக்கு முன்பு இவரை சந்தித்து, அப்பா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் உடல் நலம் பெற்று வருவார் என நம்பிக்கையான வார்த்தைகளை கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிடத் மருத்துவ அறிக்கையில் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. 

மேலும் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் வருகை அதிகரித்துள்ளது. நடிகை குஷ்பு கண்ணீரின் கண்ணீரோடு வந்தார்.
இவர் வந்த சில நிமிடங்களில் கலைஞர் கருணாநிதி காலமானார் என்கிற செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.