அன்னையர் தினத்திலும் சர்ச்சை பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு  நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு நெட்டிசன்களிடம் வசவுகளை பெற்று வருகிறார்.

இன்று அன்னையர் திப்னம் கொண்டாடப்படுகிறது. இதனால், நட்சத்திரங்கள் பலரும் தங்களது தாயாருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குஷ்புவும் தனது தாயாருடன் எடுத்த புகைப்படங்களையும், தனது மகள்களின் இளம் வயது மற்றும் தற்போதுள்ள புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். 

 

அதில் ஒரு பதிவில் குஷ்புவுக்கு அவரது தாயார் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் புகைப்படத்தையும் மற்றொ பதிவில் தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் தனது தாயார் இம்மாதம் 3ம் தேதி தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடியதாக குறிப்ப்பிட்டு இருந்தார். உங்கள் தாயின் அளவை யார் கேட்க வேண்டும்? அப்பா பெயர் தெரியாத விந்து நன்கொடையை சரிபார்த்து கொள்ளுங்கள் என பதிவிட்டு இருந்தார். இந்தப்பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பதில் அளிப்பவர், கேள்வி கேட்பவர்களின் தாயை ஏன் வம்பிற்கிழுக்கிறீர்கள். எல்லை மீறி போகிறீர்கள்.

 

 இப்படியே போனால் உங்கள் அக்கவுண்டை முடக்க ரிபோர்ட் செய்து விடுவேன் என ஒருவர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ‘’வேலை இருந்தா போய் பாருடா வந்துட்டாங்க’’ என பதிலளித்துள்ளார். மற்ரொருவர் ‘இனிமேல் 56 இஞ்ச் எனச் சொல்லாதீர்கள்’ என ட்வி போட்டிருந்தார். ஏன் உன் அம்மா சைஸை கண்டுபிடிச்சிட்டியா? என மிக மட்டமான கேள்வியை குஷ்பு பதிவிட்டுள்ளார்.