பணமதிப்பு குறித்து மோடியை விமர்சித்த ஜோதிமணியை பற்றி தனிப்பட்ட முறையில் ஆபாசமாக பாஜக ஐடி விங் ஆட்கள் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:  பாஜக கட்சியினர் இது போன்று விமர்சிக்கின்றனர் , உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர் ,  அக்கா ,தங்கைகள் ,அண்ணி ,மகள்கள் உள்ளனர்,அதை முதலில் நினைத்து பாருங்கள் .

அரசியலுக்கு வருபவர்களை பெண் என்பதால் கேவலமாக சித்தரிப்பது சரி அல்ல.  பாஜக பெண்ணை மதித்து பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும் என்பதை மோடி மற்றும் அவர்கள் கட்சியினர்  கற்றுகொள்ளணும், இவ்வாறு குஷ்பூ ஆவேசமாக கூறினார்.