யார் வாய்ப்பு கொடுக்கிறார்களோ, அந்த கட்சி சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி‬யிடுவேன்-கு.க செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி வளாகத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு கா செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :- 

கட்சியில் இருந்து என்னை நீக்கியது நியாயமல்ல, சோகாஸ் நோட்டீஸ் கொடுத்து பிறகு விசாரணை மேற்கொள்ளாமல் என்னை கட்சியிலிருந்து நீக்கியது சட்டத்திற்கு முரணானது.இருந்தபோதிலும்  என்னை கட்சியிலிருந்து நீக்கியது பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் நேரில் வர தயார் என நான் கூறியும் என்னை நேரில் சந்திக்க துணிவு இல்லாததால் என்னை கட்சியிலிருந்து நீக்கி இருக்கின்றனர், இதுவரை நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, வேறு ஏதாவது கட்சி வாய்ப்பு அளித்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். 

திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இருந்து வெளியே வர வாய்ப்புகள் உள்ளது. என்னிடம் சிலர் தொடர்பில் உள்ளனர்.ஆனால் அதுயார் என்ற விவரத்தை  தற்போதைக்கு என்னால் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் துரைமுருகன் தன்னை தூசி என்று  சொல்லி,  நேரத்திற்கு தகுந்தாற்போல் போல்  பேசி வருகிறார், அவரை பேச வைக்கின்றனர்,  துரைமுருகன் இரண்டு நிலைப்பாடு இருப்பது போல் பேசி வருகிறார். நான் திமுகவில் இருந்து வெளியே வருவதற்கு உதயநிதிஸ்டாலின் தலையீடு இருந்தது, மொத்தத்தில் திமுக ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது. நிச்சயமாக திமுகவிலிருந்து மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வருவார்கள் என்றும் கூறினார்.