Asianet News TamilAsianet News Tamil

நெருப்பை போன்றவர்.! அறிஞர் அண்ணாவுடன் பானுமதியை தொடர்பு படுத்தி பேசுவதா.? சீறும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பானுமதியை எளிதில் யாரையும் அருகில் அண்ட விட மாட்டார். தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டு யாருடைய தயவும் இன்றி வெளியேறி செல்கிறவர் என வழக்கறிஞர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

KS Radhakrishnan has condemned the talk linking actress Banumathi with arignar anna kak
Author
First Published Sep 25, 2023, 10:45 AM IST

அண்ணா தொடர்பான சர்ச்சை கருத்து

அறிஞர் அண்ணா தொடர்பாக அண்ணாமலை பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணாவைவயும் நடிகை பத்மினியையும் தொடர்பு படுத்திய பல்வேறு கருத்தகளை சமூகவலைதளத்தில் பாஜகவினர் பதிவு செய்தனர். இந்த பதிவிற்கு அதிமுக மற்றும் திமுகவினர் பதிலடி கொடுத்தனர்.  

இந்த நிலையில் இது தொடர்பாக சமூகவலை தளத்தில் தனதை கருத்தை  வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.  சமீபத்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல் வெகு நாட்களாகவே மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் தசாவதானி பானுமதி  இருவர் பற்றியும் உண்மைக்கு மாறாக, முரணான விதத்தில், தவறான கண்ணோட்டத்துடன் இங்கே பலரும் வதந்தியாக பேசிக் வருகிறார்கள். 

அண்ணா-பானுமதி 

நடிகை பானுமதி அம்மா எல்லோரையும்  மிஸ்டர் எம்ஜிஆர், மிஸ்டர் சிவாஜி கணேசன் என்று பெயர் சொல்லி தான் கூப்பிடுவார். ஆந்திர முதல்வராய் இருந்த  திரு ராமராவ் அவர்களை அண்ணா என்று அழைப்பார். கலைகளில் தீவிர மனோநிலையையும் இல்லத்தில் அதீத பக்தி மார்க்கத்தையும் கொண்டவர் திருமதி பானுமதி அவர்கள். எளிதில் யாரையும் அருகில் அண்ட விட மாட்டார். தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டு யாருடைய தயவும் இன்றி வெளியேறி செல்கிறவர் அவர். பலமுறை அவரை நடிக்க வற்புறுத்தி கேட்டுக்கொண்ட பிறகுதான் தன்னுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராத பாத்திரங்களை மட்டும் கம்பீரமாக ஏற்று நடித்து திரையுலகில் வலம் வந்தவர்.

KS Radhakrishnan has condemned the talk linking actress Banumathi with arignar anna kak

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ

எனது மனைவியின் குடும்பத்துக்கு நெருங்கியவர். திருமணத்திற்கு வர இருந்தும் சில தவிர்க்க இயலாத காரணங்களால்  அவர் வர இயலவில்லை.  வெளி நாட்டுக்கு சென்று திரும்பிய உடன் எங்களை அழைத்து உபசரித்து வாழ்தினார், ஒழுக்கம் விஷயத்தில் நெருப்பை போன்றவர். யாருக்கும் அடிபணியாதவர். பொது வாழ்க்கைக்கு அல்லது கலைக்கு என  ஒருவர் வந்து விட்டால் அவர் குறித்து யாரும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம் என்பது மாதிரியான நபர்கள் சற்று நிதானமாக தனது  கருத்துக்களை சொல்ல வேண்டும்! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி இருக்க கூடாது. 

KS Radhakrishnan has condemned the talk linking actress Banumathi with arignar anna kak

நெருப்பு போன்றவர் பானுமதி

நாகரீகம் முக்கியம். இதையெல்லாம் எளிதில் நானும் கூட கடந்து போக முடியும். திருமதி பானுமதி அவர்களை முற்றிலும் அறிந்தவன் என்கிற முறையில் இவ் வதந்திகள் வெறும் வாயை மெல்லும் அவல் தான். அவர் ஒரு கலைகளின் அரசி. சுயமரியாதையிலும் சுய கௌரவத்திலும் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நெருப்பை போன்றவர். இறந்தவர்களை அவர்களின் மகத்தான செயலின் பொருட்டு நினைவு கூறுங்கள். அரசியலிலும் கலைகளிலும் இருவரும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை.! ஐ.டி சோதனை என்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சமாட்டோம்- சீறும் ஜெயக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios