ஸ்டாலின் தமிழகத்திற்குள் நுழைய முடியாதா.? இது என்ன உத்தரபிரதேசமா.? அண்ணாமலையை இறங்கி அடிக்கும் கேஎஸ் அழகிரி
முதலமைச்சரை தமிழகத்திற்குள் நான் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என அண்ணாமலை சொல்லுகிற அவர் அளவுக்கு அவருக்கு வலிமையோ, அரசியல் திறனோ, அரசியல் பண்பாடு கிடையாது என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை- எதிர்க்கும் தமிழகம்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த வருடம் தண்ணீர் கிடையாது என காங்கிரஸ் அமைச்சர் சொல்லுகிறார். எனவே பெங்களூரில் நடைபெறும் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றால் முற்றுகையிடுவோம் என தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டத்திற்கு முதல்வர் சென்றால் தமிழகத்திற்குள் திரும்ப வர விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாரதிய ஜனதாவினுடைய தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். மோடிக்கு எதிரான கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டால் அவர் தமிழகத்திற்குள் நுழைய முடியாது என சொல்லி இருக்கிறார்.
அண்ணாமலைக்கு வலிமையோ, திறமையோ இல்லை
அவர் தமிழகத்தை உத்தரப்பிரதேசம் என்று நினைத்துக் கொண்டுள்ளதாக விமர்சித்தார். கர்நாடகத்தில் மேகதாது அணை அவர்கள் கட்டினால் அதற்கு காரணம் காங்கிரசும், திமுகவும் தான் என்பதை போன்ற ஒரு குற்றசாட்டை வைக்கிறார்கள். மேகதாது திட்டத்திற்கு அடித்தளமிட்டது உங்களுடைய கட்சி தான். உங்களுடைய மாநில அரசாங்கம் தான், உங்களுடைய மத்திய அரசாங்கம் தான். பொம்பை அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது அணை கட்டுவதற்கான ஒரு வரைவு திட்டத்தை டெல்லிக்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அதற்கான அனுமதியை பெற்றார். அப்படி ஒரு அனுமதியை கொடுக்கிற ஒரு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடைய ஆலோசனையை கேட்க வேண்டும் என்பது விதி.
ஒப்புதல் கொடுத்த மத்திய பாஜக அரசு
தமிழகத்தை கேட்டிருக்க வேண்டும், பாண்டிச்சேரியை கேட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் கேட்காமல் தங்களுடைய மாநில அரசாங்கியாக இருக்கிறது என்பதற்காக அந்த வரைவு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். அதை வைத்துக் கொண்டுதான் பொம்மை அரசாங்கம் அந்தப் பணியை துவக்க ஆரம்பித்தார்கள். எனவே இதற்கு காரணமே பாஜக தான். எனவே அண்ணாமலையே என்ன செய்ய வேண்டும் என்றால் நான் அப்படி சொல்லிவிட்டேன். இனிமேல் நான் தமிழகத்தில் இருக்க மாட்டேன்., என்று சொல்லி அவர் வழி நடப்பு செய்ய வேண்டும். வேறு மாநிலத்திற்கு சென்று விட வேண்டும் ஒழிய அவர் தமிழகம் முதலமைச்சரை நான் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லுகிற அவர் அளவுக்கு அவருக்கு வலிமையோ, அரசியல் திறனும் அரசியல் பண்பாடு கிடையாது.
எந்த தியாகத்தையும் செய்ய தயார்
காவிரி பிரச்சனையை பொறுத்தவரை தமிழக அரசும், தமிழக காங்கிரசும் தெளிவான நிலையில் இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் உடைய வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த மாநில அரசாங்கம் உரிமைகளுக்காக போராடக் கூடியது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தில் உடைய எல்லா உரிமைகளுக்கும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறது. இன்றைக்கு அவர்களுக்கு தோழமையாக இருக்கிற தமிழக காங்கிரஸ் கட்சியும் சரி, மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் சரி, மாநிலத்தினுடைய உரிமைகளுக்காக நாம் நேர்மையாக போராடுவோம் வெறும் வாய் சொல் வீரர்கள் அல்ல என தெரிவித்தார்.
பொம்மையை போல் கவிழ்ப்போம்
கர்நாடகத்தின் உடைய ஒரு அமைச்சர் ஒன்றை சொல்லிவிட்டார் என்றால் அது சட்டமாகாது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் தலைவர்கள் அல்ல,டெல்லியில் அதற்கான தலைமை இருக்கிறது. எனவே எங்களையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. தமிழக அரசையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. இங்கே இருக்கிற பாரதிய ஜனதா இதையெல்லாம் வைத்து ஒரு நாடகம் ஆடுகிறார்கள். இந்த வரைவு திட்டத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததே மோடி அரசாங்கம் தான். அந்த வரைவு திட்டத்தின் உடைய அங்கீகாரத்தை பெற்றவர்களே பொம்மை அரசாங்கம் தான். எனவே அவர்களை பொம்மையை போல நாங்கள் கவிழவைப்போம் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்