தமாகாவை ஒரு கட்சியாகவே மதிக்காத இபிஎஸ்..! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.! - கேஎஸ் அழகிரி ஆவேசம்

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைரும் அறிவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
 

KS Alagiri has criticized EPS for not respecting tamil manila congress as a party

கூட்டணி கட்சியை திமுக மதிக்கவில்லையா.?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை தி.மு.க. அடிமைப்படுத்தி நடத்துகிறது என விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைமை காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது போல, இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை ? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. 

KS Alagiri has criticized EPS for not respecting tamil manila congress as a party

இபிஎஸ்க்கு தகுதி இல்லை

தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அ.தி.மு.க. அபகரித்துக் கொண்டுள்ளது. இதுதான் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம். இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை தி.மு.க. அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லையென கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இனியும் ஒரு நாள் கூட கிடப்பில் போடக்கூடாது.! ஒப்புதல் அளியுங்கள், இல்லையென்றால் திருப்பி அனுப்புங்கள்-அன்புமணி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios