எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்…எடப்பாடி அரசு குறித்து ஆரூடம் சொன்ன காங்கிரஸ் தலைவர்…

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்க வழியே கிடையாது என்றும், அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் நிவாரணம் வழங்க முடியாது, அறிவித்து விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாகி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் அரசு திணறி வருவதாகவும் ராமசாமி குறிப்பிட்டார்.

இந்த அரசு நீடிக்க வழியே இல்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று ராமசாமி தெரிவித்தார். எடப்பாடி அரசால் மக்களுக்கு நல்லாட்சியை தர முடியாது என்றும், தற்போதைய அதிமுக அரசை சாதாதரண மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.