krishnaswamy pressmeet about gst
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நேற்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியை கொள்கை அளவில் வரவேற்க வேண்டும். இதுவரை ஜி.எஸ்.டி. அமலில் இல்லாததே நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு காரணம்.
ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாராட்டுகிறோம். வெளி மாநிலங்களுக்க மணல் கடத்துவதை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
