Asianet News TamilAsianet News Tamil

தேவேந்திர குல வேளாளார் சாதியினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.. மதுரை கூட்டத்தில் மோடி உறுதி !!

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

krishnasamy application modi
Author
Madurai, First Published Jan 28, 2019, 7:13 AM IST

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குலவேளாளர் சாதியை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார். அவர் அண்மையில் சென்னையில் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு மாநாடு நடத்தினார்.தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசிடமும் நேரில் சென்று கொடுத்துள்ளார்.

krishnasamy application modi

இந்நிலையில் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து  பாஜகவின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள மத்திய அரசின் சாதனைகளை விளக்கி  மோடி பேசினார்.

krishnasamy application modi

அப்போது தென் மாவட்டங்களில் அதிகளவில் வாழும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனைக் கருணையோடு அணுகுவது தமது வழக்கம் என்றும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அந்த மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிகளை என்னிடம் எடுத்துச் சொன்னார்கள்.

krishnasamy application modi

அவர்களுக்கு நியாயம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு எஸ்.சி/ எஸ்.டி ஆணையத்திடமும், மாநில அரசிடமும் கேட்டுக்கொண்டேன். செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிற ஏற்றத்தாழ்வுகள் நீக்க வேண்டும் என மோடி உறுதி அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios