"உயரத்தில் இருந்த ஒரு கட்சியை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது பிரேமலதாவும், சுதீஷும் தான்" என்று சசிகலாவின் அண்ணன் மகளும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார். 

தேமுதிகவின் அதிபயங்கர வீழ்ச்சிக்கு, விஜயகாந்த்துக்கும் பங்கு உள்ளதென்று தான் சொல்லணும். அவருக்கு இன்றைக்குதான் உடம்பு சரியில்லை. அவர் நன்றாக இருந்த சமயத்தில் மனைவியையும், மைத்துனரையும்  கட்சிக்குள் விடாமல்  விருந்திருந்தால் இன்று தேமுதிக அசுர வளர்ச்சியை சந்தித்திருக்கும்.

நேற்று பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பின்போது  மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதும், மாறி மாறி கூட்டணி பேரம் பேசிவிட்டு அப்படியே அந்தர் பல்டி அடித்ததும் அரசியலில் இப்படியான அசிங்கம் நடக்குமா என யோசிக்க வைத்தது.

செம்ம கெத்தாக கம்பீர விஜயகாந்த்துக்கு இப்படி ஒரு நிலைமை வரணுமா? "இன்றைய அதிமுக ஆட்சியே எங்கள் தேமுதிகவின் தயவால்தான் நடக்கிறது" என்று சொன்னார்  பிரேமலதா.  உண்மையை சொல்லனும்னா அதிமுகவுடன் முதல் முறையாக தேமுதிக கூட்டணி வைத்தபோது, அந்த தேர்தலால்தான் அக்கட்சி உயிர் பிழைத்து, எதிர்க்கட்சியாக அமர்ந்தது.  திமுகவை வரலாறு காணாத வீழ்த்திய சந்தித்தது. முதல் தேர்தலில் நம்பி வாக்களித்த 10 சதவிகிதத்தினர், அடுத்து கூட்டணி அமைத்ததும் 5 சதவிகிதமாகி குறைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எல்லோருடனும் பேரம் பேசி படியாததால், மக்கள் நலக்கூட்டணி அமைத்து மொத்தமாக போண்டியானது தேமுதிக.  அதன் பிறகுதான் தேமுதிக தாறுமாறாக சரிவை சந்தித்து சிதறிப் போனது. 

இந்நிலையில், கிருஷ்ணபிரியா போட்ட ஒரு ட்வீட்  தேமுதிகவினரையே யோசிக்க வைத்துள்ளது.  அதில், "2006 முதல் தே.மு.தி.க , திரு விஜயகாந்த் அவர்களால் , அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு , அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்கட்சியை தள்ளியதில் சம பங்கு வகிக்கிறார்கள் திருமதி பிரேமலதாவும் , திரு சுதீஷும்" என்று பதிவிட்டுள்ளார். கிருஷ்ணபிரியா  போட்ட பதிவு அப்பட்டமாக உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதுவரை யாருமே அதிமுக அன்று விஜயகாந்த்தை தூக்கி உயர்த்தியதை பேசாமலே இருக்கிறார்கள், எல்லாவற்றையும் இன்றைய அதிமுக தலைமை மறந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த எட்ட முடியாத உயரத்துக்கு போனது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் அதல பாதாளத்துக்கும் போனது.