Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவின் மரணம்.. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா விசாரணை ஆணையத்தில் ஆஜர்

krishnapriya aajar in arumugasamy inquiry commission
krishnapriya aajar in arumugasamy inquiry commission
Author
First Published Jan 2, 2018, 10:22 AM IST


ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒருவாரம் கழித்து இன்று மீண்டும் கூடுகிறது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலா, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில்  2 வார கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவாரம் கழித்து இன்று கூடிய விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடமும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ தொடர்பாகவும் விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios