Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கட்சிக்கு கிருஷ்ணகிரி ஒதுக்கீடு... சீட்டு சீனியருக்கா..? வாரிசுக்கா..?

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் அல்லது மோகன் குமாரமங்களம் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 
 

krishnagiri Gopinath or Mohan kumarmangalam
Author
Tamil Nadu, First Published Mar 9, 2019, 4:56 PM IST

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் அல்லது மோகன் குமாரமங்களம் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. krishnagiri Gopinath or Mohan kumarmangalam

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியிலும், சேலம் தொகுதியில் தங்கபாலு மற்றும் மோகன் குமாரமங்கலம், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது மருமகள்  ஸ்ரீநிதி ஆகியோர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் செயல் தலைவரான மோகன் குமாரமங்கலத்துக்கு களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன். ஆனால், தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யும்போது, செயல் தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது. இரண்டு முறை  எம்.பிதேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படாது என்று ராகுல் காந்தி உறுதியாகக் கூறியுள்ளார் என்கிறனர். அதன்படி மோகன் குமார மங்களம் களமிறக்கப்படுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. krishnagiri Gopinath or Mohan kumarmangalam

அவருக்கு சீட் ஒதுக்கப்படாமல் போனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.கோபிநாத்துக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவான இவர் கடந்த 2016 சட்டமன்றதேர்தலில் ஒசூர் தொகுதியில் பாலகிருஷ்ணா ரெட்டியிடம் தோல்வியை தழுவினார். அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டின் போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்த குற்றத்திற்காக சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு பதவியை இழந்தவர். krishnagiri Gopinath or Mohan kumarmangalam 
அதற்கு முன்பாக ஒசூர் தொகுதியி 2001, 2006, 2011 ஆகிய மூன்று தேர்தல்களிலும் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவர். கிருஷ்ணகிரி தொகுதியை உள்ளடக்கிய ஒசூரில் பலம் வாய்ந்தவராக கருதப்படும் கே.கோபிநாத் களமிறக்கபடலாம் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios