பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.! அதிமுக கூட்டணியில் விசிக இணைகிறதா? கே.பி முனுசாமி அதிரடி பதில்

எங்களுடன் காங்கிரஸ் கட்சியும் இருந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்துள்ளது. கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவது. அங்கிருக்கிற கூட்டணி சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படியும் மாறலாம். அப்படி மாறும்பொழுது யார் யார் வருவார் என்பதை காலம்தான் பதில் சொல்லும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 
 

KP Munusamy has said that there is no chance of joining the alliance with BJP again KAK

பாஜகவுடன் கூட்டணி முறிவு

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து விடும் என செய்திகள் வெளியாகியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி கூறுகையில், பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு அதனை எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுள்ளார். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும் என  ஸ்டாலின் மற்றும் உதயநிதி கூறுவது நடக்காது.

அதிமுக பாஜக உடனான கூட்டணி முறிவு சிந்தித்து எடுத்த முடிவு.  இதில் எந்தவித மாற்றமும் இருக்காது.  அண்ணாமலையை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை அதற்கான கேள்விக்கு இடம் இல்லையென கூறினார்.  அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். சட்டமன்றத் தேர்தலையும் எதிர் கொள்வோம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தலைவர்களை விமர்சித்தால் எப்படி ஏற்க முடியும்

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடு தான் எடுக்கப்படும். நாங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொழுது 8கோடி தமிழக மக்களின் நலன், ஜீவாதாரண பிரச்சனையில் முனைப்பாக இருப்போம்.  அதிமுக தலைவரை விமர்சித்ததற்காக  ஏற்கனவே ஒரு முறை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பாஜக மாநில தலைவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்தோம். பாஜகவின் தலைமைக்கும் தெரிவித்து விட்டோம். அதன் பின்னரும் எங்கள் கட்சித் தலைவரை விமர்சனம் செய்தார் என்றால் அதனை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இபிஎஸ் விளக்கம் அளிக்காதது ஏன்.?

அதிமுக பாஜக கூட்டணி முடிவு தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி எந்த கருத்தும் கூறவில்லை என கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், அதிமுக என்பது ஜனநாயக இயக்கம், நான் இங்கே உட்கார்ந்து கொண்டு கருத்து கூறுகிறேன் என்றால் எங்களுடைய பொதுச்செயலாளரின் உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன். எனவே பொதுச்செயலாளர் சொல்ல வேண்டிய காலம் வரும் பொழுது பொதுச் செயலாளரை சொல்லுவார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு .?இனி போக போக தெரியும், அதற்காகத்தான் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அதிமுக- பாஜக கூட்டணி வாபஸ் என்று வந்தவுடன் தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டார்கள். இதுவே திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. ஏற்கனவே எங்களுடன் காங்கிரஸ் கட்சியும் இருந்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்துள்ளது. கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவது. அங்கிருக்கிற கூட்டணி சுழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படியும் மாறலாம். அப்படி மாறும்பொழுது யார் யார் வருவார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.? அவர் இப்போது அப்படி சொல்லி உள்ளார் இன்னும் தேர்தலுக்கு காலம் உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வருமா.? காலம் தான் முடிவு செய்யும். பாஜகவை ஒதுக்கி வைத்ததன் காரணமாக எந்த கட்சி இங்கே வருவார்கள் என உடனடியாக சொல்ல முடியாது இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம். நிச்சயமாக வலுவான கூட்டணியோடு தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

கூட்டணி முறிவுக்கு பின் பாஜக குறித்து வாய்த்திறக்காத எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios