தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாலக்கோடு தொகுதியில் உள்ள அமைச்சரான   கே.பி.அன்பழகனை ஏற்கனவே பகைத்துக் கொண்டதாலும், உள்ளடி வேலைகள் நடக்கும் என்பதாலும் தர்மபுரியில் நின்றால் தோல்வியே மிஞ்சும் என அன்புமணிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதுவரை 1998,1999, 2004 மற்றும் 2014 என நான்குமுறை பாமக  வென்றிருந்தாலும், ஏன் கடந்த முறை மூன்றாவது அணியில் அன்புமணி ராமதாஸ் 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தமுறை அந்த தொகுதியில் தொடர சற்று கலக்கத்துடனேயே இருக்கிறாராம்.

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்  பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகியவை உள்ளன. இதில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் கேபி அன்பழகனுக்கும் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே  பெரும் வார்த்தைப் போரே நடந்தது.

முதலில், தருமபுரி மாவட்டத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமைச்சருக்கு ஆண்மையிருந்தால் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக சிப்காட் வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அன்புமணி சவால் விடுத்திருந்தார்.

இதற்கு செய்தியாளர்களைக் கூட்டிய கேபி அன்பழகன்,  எனக்கு ஆண்மையில்லை என்று  அன்புமணி கூறிவிட்டார். சிப்காட் அமைப்பதற்கும், ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்?’’ தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக அன்புமணியை தவறாக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டனர். ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாகி விடும் என்று அவர் நினைக்கிறார். கடந்த 2001-2006 வரை நான் அமைச்சராக இருந்தபோது தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக தான் இருந்து வருகிறதாம்.  வரும் தேர்தலில் யாரை எதிர்த்தால் மக்கள் தன்னை திரும்பி பார்ப்பார்கள் என்று நினைத்து 4 ஆண்டு காலம் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அன்புமணி என்மீது குறை கூறுகிறார்.

கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற அன்புமணி பல கிராமங்களுக்கு அன்புமணி நன்றி சொல்லக்கூட போகவில்லை. தொகுதி பக்கம் வராத நாடாளுமன்ற உறுப்பினர் எதை சொல்லுவது என்று தெரியாமல் உளறிக் கொட்டுவதாக அன்புமணியை கிழித்து தொங்கவிட்டார்.

வட மாவட்டங்களில் வாக்கு வங்கியை வைத்திருப்பதாக பொய் சொல்லிக்கொண்டு திரியும், அன்புமணி சொந்த ஊரை விட்டுவிட்டு  தருமபுரியை நாடி வந்து இங்குள்ள மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் நாயக்கன்கொட்டாய் சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டதால் கடந்த எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றார். வருகிற தேர்தலில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியாது என பேசினார், இதன் உச்சகட்டமாக ஆண்மையற்றவர்கள் அப்படித் தான் செய்வார்கள் என்றும் அன்புமணிக்கு ஆறறிவு இல்லை, அவருக்கு ஐந்தறிவு மட்டுமே இருப்பதாகவும் எரிந்து விழுந்தார். அன்புமணியும் சும்மா விடவில்லை அன்பழகனுக்கு எதிராக பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சா.பெ. வெங்கடேஸ்வரநை வைத்து அறிக்கையே வெளியிட்டார்.

அதில்; அமைச்சரின் செயல்பாடுகளை அளவீடாகக் கொண்டு பார்த்தால் அவருக்கு எந்த அறிவுமே கிடையாது. ஜெயலலிதாவின் கால்களில் தொடங்கி சசிகலா, டி.டி.வி. தினகரன், முன்பு ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிச்சாமி என கண்களில் படும் கால்களில் எல்லாம் விழுந்து, எழுந்து அவர்கள் புண்ணியத்தில் ஊழல் செய்து பிழைக்கும் அன்பழகனுக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவ்வகையில் பார்த்தால் அவர் ஓரறிவு விலங்கு.... இல்லை... விலங்கு என்று கூற முடியாது... அவர் ஓரறிவு ஜந்து. வரும் தேர்தலில் மக்களால் நசுக்கப்பட இருப்பவர்.

அதிமுகவின் அதிகாரத்தில் இருக்கும் நபர்களில் கால்கள் மண்ணில் புதைந்திருந்தால் அதற்கு இணையாக குழிதோண்டி, அந்த குழியில் விழுந்து காலைத் தொட்டு வணங்கும் அளவுக்கு ஆகச் சிறந்த அடிமையான அன்பழகன் என அமைச்சரை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டனர். 

கடந்த சில மாதங்களாக அன்புமணிக்கு அமைச்சர் கேபி அன்பழகனுக்கும் நடந்த இந்த சண்டையால் என்னதான் பாமகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் அமைச்சருடனான பழைய பகைக்கு பழிதீர்த்துவிடுவாரோ என்ற பயத்தில் ஆரணிக்கு தாவுவதாக சொல்லப்படுகிறது. வட மாவட்டங்களில் பாமகவுக்கென்றே தனி பலம் உள்ளது, திமுகவிற்கு அடுத்த இடத்தில் பாமகவுக்கு தான் வாக்கு வங்கி அடுத்ததாக பாமகவைப் போலவே விஜயகாந்துக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி, இந்த தொகுதியில் சிவி சண்முகம் அண்ணனான நியூஸ் ஜெ MD ராதாகிருஷ்ணனுக்கு செல்வாக்கு உண்டு. ஆகையால் அவருக்கு ராஜ்யசபா சீட்டு உண்டு என்பதால் இறங்கி வேலைபார்ப்பார். அன்புமணிக்கு உள்ளடி வேலை பார்க்க இங்கு ஆளே இல்லை என சொல்லலாம். இப்படி இருக்கையில் எதற்க்காக தர்மபுரி பக்கம் பொய் சிக்கனும் என அன்புமணியின் பார்வை ஆரணிக்கு திரும்பியதாம்.