Asianet News TamilAsianet News Tamil

’நீ நடிச்சது போதும்...கட்சிக்கு வந்துடு’...கோவை சரளாவின் கையப் புடிச்சி இழுத்த கமல்...


மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு கமலின் ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகம் முழுக்கவே பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ‘இது மக்கள் நீதி மய்யமா இல்லை மகளிர் நீதி மய்யமா? என்று நகைச்சுவையாய்ப் பேசினார் அக்கட்சியின் புதிய உறுப்பினரான கோவை சரளா.

kovai sarala explains about joing kamal party
Author
Chennai, First Published Mar 8, 2019, 1:16 PM IST

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு கமலின் ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகம் முழுக்கவே பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ‘இது மக்கள் நீதி மய்யமா இல்லை மகளிர் நீதி மய்யமா? என்று நகைச்சுவையாய்ப் பேசினார் அக்கட்சியின் புதிய உறுப்பினரான கோவை சரளா.kovai sarala explains about joing kamal party

இன்று காலை 10 மணி அளவில் கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக்கொண்ட நடிகை கோவை சரளா, அங்கு பெரும் திரளாகக் கூடியிருந்த பெண்கள் கூட்டத்தில் கட்சியில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து உரையாடினார். அப்போது பேசிய அவர்,'' நான் பல இடங்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும் போது, இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். போகிற போக்கைப் பார்த்தால் 'மக்கள் நீதி மய்யம்', 'மகளிர் நீதி மய்யம்' ஆக மாறிவிடும் என நினைக்கிறேன்.kovai sarala explains about joing kamal party

பெண்கள் வீட்டின் கண்கள் என்பார்கள். இனிமேல் அந்தக் கதையெல்லாம் இருக்கவே கூடாது. நாம் சோறு ஆக்கி கொடுப்போமாம், ஆண்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்று ராஜ்ஜியம் பண்ணுவார்களாம். இனிமேல் விடுவோமா நாம்?. பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். சக்தி இல்லையேல் சிவமில்லை.

ஆண் - பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், இந்த நாடு நலம்பெறும் என்பது உறுதியாகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல இடங்களில் பல சூழ்நிலைகளில் நாம் நலிந்தும், மலிந்தும் போய்விட்டோம். இனி அந்த நிலை நமக்கு வரக்கூடாது. ஆகவே, வரும் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.kovai sarala explains about joing kamal party

பெண்கள் நினைத்தால் ஏன் முடியாது?. நம்மூர் ஆண்கள் நம்மை மீறிப் போய்விடுவார்களா?. நேரா போற 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு ஓட்டு போடுற என்று நாம் சொன்னால் ஏன் நடக்காது என்கிறேன். பெண்கள் நாம் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு 'மக்கள் நீதி மய்யம்' ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பல சாதனைகள் செய்திருக்கிறார் கமல் சார். இத்தனை ஆண்டுகாலம் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு சேவை செய்வதற்காக நான் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.kovai sarala explains about joing kamal party

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து என்னத்த கிழிப்பார்கள் என்றார்கள். சினிமாவில் நடித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் உண்மையான மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும். பிச்சைக்காரராக நடித்தால் அதன் மனநிலை என்ன என்பதை உணர முடியும். ஆகையால், தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

தலைவர் கமல் நடிப்பு வேலையைப் பார்த்தது போதும், இந்த வேலையைப் பார் என்று உத்தரவிட்டதால் வந்துவிட்டேன். முன்பு, தலைவருக்கு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன். "நீங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம்" என்று சொல்லியிருந்தேன். ஆகையால், தான் இப்போது அவர் நடக்கும் பாதையிலே, நாங்கள் பின்னால் செல்லத் தயாராகவுள்ளோம்''.என்றார் கோவை சரளா.


 

Follow Us:
Download App:
  • android
  • ios