கொரோனா வைரஸ் மட்டுமல்ல தமிழக மக்களை எந்த வைரசும் தாக்காது என அமைச்சர் செல்லூர் ராஜு  கருத்து தெரிவித்துள்ளார் .சீன நாட்டின் பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் தென்படத் தொடங்கியுள்ளது . சீனாவில் கொரோனா வேகமாக  பரவி வரும் நிலையில்,   அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .    சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனாவெங்கும் பரவி சீன மக்களை கபளீகரம் செய்து வருகிறது .  வைரஸ் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் மயங்கி விழுந்து இறக்கும் சோகம் சீன வீதிகளில் காணமுடிகிறது சார்ஸ் வைரஸை போல இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதால் சர்வதேச ஆபத்தாக இந்த கொரோனா மாறியுள்ளது . இது  சீனாவிலிருந்து வேகமாக பரவுவதால் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை  சர்வதேச நாடுகள் துண்டித்துள்ளன . 

இதனால் சீனாவில் முற்றிலுமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.  இந்த வைரஸ் பரவுவதற்கு அதிக ஆபத்து இருக்கும் முதல் 30 நாடுகளின் பட்டியல் ஒன்றை இங்கிலாந்து பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்,  அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளன .சீனாவுக்கு அடுத்து மிகத்தீவிரமாக நோய் பரவக்கூடிய அபாயம்  உள்ள நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது,   அதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் , ஹாங்காங் உள்ளன .  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று அபாயத்தில்,  அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ,  ஆஸ்திரேலியா 10-வது  இடத்திலும் ,  இங்கிலாந்து 17வது இடத்திலும் ,  இந்தியா 23 வது இடத்திலும் உள்ளன . பாங்காங்  வைரஸ் பாதிப்பில் தீவிர நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .

 

இந்நிலையில்  சீனாவில் இருந்து இந்தியா வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . ஆனாலும் சீனாவில் இருந்து நேரடியாக கேரளாவுக்குச்  சென்ற மாணவருக்கு வைரஸ் கிருமி தாக்கம் இருப்பது  உறுதி  செய்யப்பட்டுள்ளது இது நாட்டு மக்களை பெரும் பீதியடைய  வைத்துள்ளது .  எனவே இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு ,  எந்த வைரசும்  தமிழக மக்களை  தாக்காது ,  தமிழகத்தை  தாக்காத அளவிற்கு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவே அந்த வைரசுக்கு மக்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என தெரிவித்தார் .  அதேபோல் தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு செய்வதை வரவேற்பதாக அமைச்சர் கூறினார் அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் சமஸ்கிருதத்தில் பூஜை நடந்ததையும் யாரும் மறந்து விடக்கூடாது எனவும் அவர் சாடினார்.