Asianet News TamilAsianet News Tamil

கோடநாடு விவகாரத்தில் அதிரடி காட்டிய மேத்யூக்கு எதிராக முதல்வர் எடப்பாடி கொடுத்த அதிர்ச்சி..!

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

Kodanad issue...chennai high court case edappadi palanisamy
Author
Chennai, First Published Jan 23, 2019, 5:27 PM IST

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்பட 6 பேர் தன்னை பற்றி பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரைணக்கு வருகிறது. 

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம்சாட்டியிருந்தார். நடந்த 5 கொலைகளுக்கும் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

 Kodanad issue...chennai high court case edappadi palanisamy

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேத்யூ சாமுவேல் கொடநாடு கொலைகள் தொடர்பாக அரசின் புலனாய்வு அமைப்புகள் தான் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். பத்திரிக்கையாளர் என்கிற முறையில் கொடநாடு விவகார தகவல்களை திரட்டி இருக்கிறேன்.

Kodanad issue...chennai high court case edappadi palanisamy

ஆவணங்களை திருடிச் சென்றதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி இன்னும் விளக்கவில்லை. கொலை, கொள்ளைக்கு பின்னால் இருப்பவர்களை பழனிசாமி தாமாக முன் வந்து கூறவேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். Kodanad issue...chennai high court case edappadi palanisamy

இந்நிலையில் மேத்யூ சாமுவேல் மீது  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனுவில் கோடநாடு ஆவணப்படம் மூலம் அவதூறு பரப்புகின்றனர். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆவணப்படம் வெளியிட்டதாக மனுவில்  புகார் தெரிவித்துள்ளார். இதனை அவசர வழக்காக  விசாரிக்க அவர் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்  நாளை விசாரிக்க உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios