Asianet News TamilAsianet News Tamil

யாரையும் அச்சுறுத்தவோ, மிரட்டுவோ கொடநாடு வழக்கை கையில் எடுக்கவில்லை.. அமைச்சர் ரகுபதி..!

 நடந்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதைச் செய்கிறபோது கோபப்படுவதில் நியாயம் இல்லை. 

Kodanad case is not over...minister ragupathy
Author
Pudukkottai, First Published Aug 22, 2021, 7:20 PM IST

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொடநாடு வழக்கு முடிந்து போனதல்ல. சாட்சிகளிடம் விசாரணை செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். யாரையும் அச்சுறுத்தவதற்கோ, மிரட்டுவதற்கோ கொடநாடு வழக்கை ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை.

Kodanad case is not over...minister ragupathy

அதே நேரத்தில், கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதைச் செய்கிறபோது கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். 

Kodanad case is not over...minister ragupathy

மேலும், தங்களை விடுதலை செய்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என திருச்சி மத்தியச் சிறையில் உள்ள இலங்கை அகதிகள், அண்மையில் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களின் விடுதலை குறித்து ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios