Asianet News TamilAsianet News Tamil

கோட நாடு எஸ்டேட் என் அக்கா வாழ்ந்த கோயில்.. உட்ராதீங்க எப்போவ்.. கொந்தளிக்கும் சசிகலா.

கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.  காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன். 

Koda Nadu Estate is the temple where my sister lived .. dont leave .. Sasikala angry.
Author
Chennai, First Published Apr 22, 2022, 5:49 PM IST

கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் சாதாரண இடமாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு அது கோயில் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை வழக்கு விசாரணையில் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:- 

கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.  காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன். கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்த வரையில் என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம். அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்க ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடு தான்.

Koda Nadu Estate is the temple where my sister lived .. dont leave .. Sasikala angry.

எங்களைப் பொறுத்த வரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாக தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள் இதுபோன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி திரு ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்துக்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணமடைந்துள்ளார்கள். 

Koda Nadu Estate is the temple where my sister lived .. dont leave .. Sasikala angry.

இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகியுள்ளனர். எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி ஓம். பகதூர் பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios