அறிவுப் பஞ்சம் இருப்பதால்தான் பிரசாந்த் கிஷோரை திமுக ஆலோசகராக நியமித்துள்ளதாக பாமக நிறுவனர்  ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

சென்னையில்,  பாமக அலுவலகத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான 18-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ’’அரசுப்பள்ளிகளில் மதிய உணவை போன்று காலை உணவும் வழங்கிட இந்த ஆண்டு முதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது, இனி வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் இல்லாத அரசு நிர்வாகத்தின் மூலம் பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மணல் குவாரிகள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்.

புதிய மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு பணிகள் தொடர வேண்டும். 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் வீதம் மாவட்டங்களை பிடிக்க வேண்டும்தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும். ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்த வேண்டும். சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நீக்க வேண்டும்.

கல்லூரி வாயிலாக ஓட்டுனர் உரிமை பெறுவதற்கான பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும்.18வயது நிரம்பும் பெண் குழந்தைகளுக்கு 5லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பில்லை. அறிவுப் பஞ்சம் இருப்பதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து திமுக பெற்றுள்ளது’’என்று விமர்சித்துள்ளார்.