Asianet News TamilAsianet News Tamil

கமலாலயத்திற்கு சென்ற அதிமுக! எதிர்பார்க்கல.! எடப்பாடி பழனிசாமியின் போராட்டம்? - கிஷோர் கே ஸ்வாமி ட்வீட்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக ஆகிய கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

kishore k swamy about aiadmk bjp alliance erode east by election
Author
First Published Jan 21, 2023, 7:56 PM IST

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 

இப்போதும் அந்த கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக போட்டியிடும் என்ற முடிவை தாங்கள் ஏற்பதாகவும், கூட்டணி தர்மத்தை மதித்து தாங்கள் முழு ஆதரவையும் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

kishore k swamy about aiadmk bjp alliance erode east by election

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இதனையொட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தங்களுடன் இணைந்திருந்த கூட்டணிக் கட்சியினரை சந்தித்து இடைத்தேர்தலுக்காக நேரில் ஆதரவு திரட்டி வருகின்றனர். 

ஓபிஎஸ் தரப்பும் அவரை சந்தித்த நிலையில் கூட்டணியில் இருக்கும் பூவை ஜகன் மூர்த்தி எடப்பாடி அணிக்கும், ஜான்பாண்டியன் இரட்டை இலைக்கும் ஆதரவளிப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதுதான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது. இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார் கிஷோர் கே ஸ்வாமி.  வலதுசாரி பேச்சாளர் மற்றும் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே ஸ்வாமி கடந்த சில வாரங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

kishore k swamy about aiadmk bjp alliance erode east by election

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அதிமுக கட்சி கமலாலயத்திற்கு செல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அரசியல், தலைவர்களுக்கு அவர்களின் கட்சிகளுக்கு எது நல்லது என்று தெரியும். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் பிரார்த்தனையும். மேலும் எடப்பாடி பழனிசாமியின் போராட்டம் சரியான முடிவுக்கு கொண்டு செல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அண்ணாமலை குறித்த பதிவு ஒன்றில், ‘நரேந்திர மோடி அவர்களே பிரச்சாரம் செய்து அண்ணாமலையே போட்டியிட்டாலும் ஈரோடு கிழக்கில் 5000 வாக்குகள் தேறாது என்பது தான் எதார்த்த உண்மை , யார் என்ன கம்பு சுத்தினாலும் , எதார்த்தத்தை மறுக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios