தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் பல நூறு கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் பெற்றப்பட்டன. 

இந்நிலையில் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக நேற்று அவர் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் லண்டன் சென்றனர்.

இதனிடையே, இங்கிலாந்தின் லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இதேபோன்று டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அந்நோய்களை கையாளும் முறைகள் தொடர்பாக நோக்க அறிக்கையும் லண்டனில் முதலமைச்சர்  முன்னிலையில் கையெழுத்தானது.