அண்ணாமலையில் என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை... பாஜவின் இறுதி யாத்திரை- இறங்கி அடிக்கும் கி.வீரமணி
நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம், பாஜக முதலில் நோட்டவை தாண்ட வேண்டும் எனவும் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்- இந்தியா கூட்டணி வெற்றி
திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ்க்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. தெலுங்கானவில் தேர்தல் கருத்துகணிப்புபடி இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. தெலுங்கானா தேர்தலை பொருத்தவரை அங்கே ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் போட்டியே தவிற பாஜக தேர்தல் களத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையெனவும் கூறினார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தும் என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை பாஜவின் இறுதி யாத்திரை எனவும் விமர்சித்தார்.
நோட்டாவை தாண்டாத பாஜக
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு ஏற்பட்ட கலவரம் இன்னும் முடியவில்லை அங்கு இன்னும் தீ பற்றி எரிகிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட பிரதமர் மோடி நேரடியாக சென்று பார்க்கவில்லை. நாட்டில் குலக்கல்வி திட்டத்தை பொறுத்தவரையில் இதே நடைமுறை 2028 வரை தொடரும் என அறிவித்துள்ளனர். இவர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இருபார்களா? என்று முதலில் பார்க்கலாம் என கூறினார். 400 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம் பாஜக முதலில் நோட்டவை தாண்ட வேண்டும் எனவும் கீ.வீரமணி கருத்து தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்