Asianet News TamilAsianet News Tamil

ஆட்டுக்குத்தாடியை போல் நாட்டுக்கு கவர்னர்.! ஆளுனர் பதவியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக- கி.வீரமணி

எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Ki Veeramani has said that the country does not need the post of governor
Author
First Published Feb 28, 2023, 11:14 AM IST

எதிர்கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பதவி என்பது அண்ணா கூறியது போல ஆட்டுக்குத்தாடி நாட்டுக்கு கவர்னர் தேவை இல்லை , தற்பொழுது பாஜக கவர்னர் பதவியை அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ  அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்க்காக  குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக அரசியல் கருவியாக பயன்படுவதாக குற்றம்சாட்டினார்.  அரசியல் சட்டத்திற்கு  இந்த முறையை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் தனது கருத்து என கூறினார்.

ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.! அதிமுக,பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த நயினார் நாகேந்திரன்

Ki Veeramani has said that the country does not need the post of governor


திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி

இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியால் தமிழகம்  வளர்ச்சி பெற்று இருக்கிறது . நாளுக்கு நாள் சாதனை செய்து இந்தியாவிலேயே முதல் முதல்வர் என்று ஸ்டாலின் பெயரெடுத்து இருப்பதாக தெரிவித்தார்.  ஈரோடு தேர்தலில் காணாமல் போபவர்கள் காணாமல் போவார்கள், கண்டுகொள்ளப்படுபவர்கள் கண்டுகொள்ளப்படுவார்கள் என தெரிவித்தார். பெரியார் கொள்கையை நிலைக்க செய்யவே இந்த இடை தேர்தல், இந்த இடை தேர்தலை நிர்ணயிப்பது எதிரிகளே என கி.வீரமணி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

டெல்லியில் உதயநிதி ஸ்டாலின்.. ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் பங்கேற்ற போட்டோஸ்..!

Follow Us:
Download App:
  • android
  • ios