சிவசேனா கட்சியை உடைத்தது போல் அடுத்து தமிழகத்தை குறி வைக்கும் பாஜக..! எச்சரிக்கை விடுக்கும் கி.வீரமணி
பாஜக ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்ததாக வரலாறு கிடையாது என தெரிவித்த கி.வீரமணி, வெற்றி பெற்ற நபர்களை விலைக்கு வாங்குவது, கட்சிகளை உடைப்பது தான் வழக்கம் என தெரிவித்தவர், முதலில் சிவசேனா கட்சியை உடைத்தார்கள் தொடர்ந்து தமிழகத்தை உடைக்க நினைப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி நடத்தும் ஆளுநர்
திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கி. வீரமணி பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் சாதாரண அரசியல் தேர்தல் அல்ல, லட்சியவதிகளுக்கும் சமூக அநீதியாளர்களுக்கும் நடக்கும் தேர்தல். மத்தியில் உள்ள பாஜக எப்படியாவது எந்த குறுக்கு வழியாவது கையாண்டு தமிழ்நாட்டை காவிமயமாக்க நினைப்பதாக தெரிவித்தார். பாஜக பல குறுக்கு வழிகளை கையாண்டு வருவதாகவும், அதை ஒடுக்கும் விதமாக தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் தற்போது ஆளுநரே ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தலையீடு செய்யவில்லை, ஆட்சியில் உடல் முழுவதையுமே நீட்டுகிறார். கவர்னர் தமிழகத்தில் போட்டி அரசங்கம் நடத்துகிறார்.
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக
தன்னுடைய அதிகாரம் என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. அரசியல் சட்டத்தை படிக்காமலே ஆளுநர் பதவி பிரமாணம் எடுத்துள்ளதாக தெரிவித்தார். பாஜக ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்ததாக வரலாறு கிடையாது. வெற்றி பெற்ற நபர்களை விலைக்கு வாங்குவது கட்சிகளை உடைப்பது தான் வழக்கம். முதலில் சிவசேனா கட்சியை உடைத்தார்கள் தொடர்ந்து தமிழகத்தை உடைக்க நினைக்கிறார்கள். இங்கே முடியாது இது தந்தை பெரியார் பூமி இங்கு யாரையும் விலைக்கு வாங்க முடியாது. தோல்வியின் அச்சத்தால் கட்சியை உடைக்க நினைக்கிறார்கள் அது முடியாது. கர்நாடகத்தில் என்ன ஆட்டம் போட்டார்கள் முடிவு என்ன ஆனது.
முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்
தென் மாநிலங்களின் பாஜகவின் கதவு சாத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி என சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் மோடியைப்பற்றி அனைவருக்கும் தெரிந்து விட்டது. எனவே இவர்களை பொறுத்தவரை எப்படியாவது. 6 மாநில தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆண்டிலேயை முன்கூட்டியே தேர்தல் வைப்பது எங்களுக்கு கவலை இல்லை. எதிர்க்கட்சிகள் சந்திக்க ஆயத்தமாக உள்ளதாக கி.வீரமணி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்