Asianet News TamilAsianet News Tamil

கேரள பெண்ணால் வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. முக்கிய ஆவணங்களுடன் முதல்வரை சந்திக்கிறார்.!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன். மேலும் தமிழக முதல்வரையும் தீபாவளிக்கு பிறகு சந்தித்து விஜயபாஸ்கர் குறித்த புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

kerala women complaint against AIADMK former minister vijayabaskar
Author
Tamil Nadu, First Published Nov 3, 2021, 5:56 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால்  தனது உயிருக்கு ஆபத்து  இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கேரள பெண் ஷர்மிளா நெல்லை டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற தொழிலதிபர் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் விஜயபாஸ்கர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில்  தெரிவித்தார்.

இதையும் படிங்க;- கண்டதுமே காதல்.. பைனான்சியர் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த முருகன்.. கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

kerala women complaint against AIADMK former minister vijayabaskar

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷர்மிளா;- நாங்களும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் பல இடங்களில் ஒன்றாக கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தொழில் ரீதியாக எனக்கு ஏற்பட்ட பாதிப்பின்போது என்னுடைய நகைகளை பத்திரமாக வைப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் அவரது மனைவி ரம்யா விஜயபாஸ்கரும் சேர்ந்து என்னிடம் இருந்து 14 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க;-காதலுக்கு வயதில்லை.. கல்லூரி மாணவியுடன் 45 வயதுடையவர் ஓட்டம்.. அவமானத்தால் மகன்களை எரித்து கொன்று தாய் தற்கொலை

இப்போது அதைக் கேட்டால் திருப்பித் தரவில்லை. ஆனாலும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று கோடி ரூபாய் பணத்தை மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு என்னை மிரட்டி வீடியோவும் எடுத்துக் கொண்டனர். இந்த பணத்தையும் அவரது நெருக்கமான மருத்துவர் மூலமாகத்தான் திருப்பித் தந்தனர். இன்னும் எனக்கு தரவேண்டிய பணம் மற்றும் நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால் என்மீது பொய் வழக்குகள் போட்டு என்னை தமிழகத்திற்குள் வர விடாமல் செய்கின்றனர்.

kerala women complaint against AIADMK former minister vijayabaskar

இப்போதும் எனது வழக்கறிஞர்கள் திருநெல்வேலியில் இருப்பதால் அவர்களை சந்திக்க செங்கோட்டை வழியாக வந்தால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன். மேலும் தமிழக முதல்வரையும் தீபாவளிக்கு பிறகு சந்தித்து விஜயபாஸ்கர் குறித்த புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க;-30 வயது வாலிபருடன் 40 வயது பெண் லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு.!

kerala women complaint against AIADMK former minister vijayabaskar

முன்னதாக சுகாதாரத்தறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் விஜயபாஸ்கர் மீது கேரள பெண் கொலை மிரட்டல் புகார் அளித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios